தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு, ஸ்னாட்ச் முறையில் 88 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடையை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.
203 கிலோ எடையை தூக்கியதன் மூலம் மீராபாய் சானு உலக தரவரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.