இயற்கை வள பாதுகாப்பு மாநாடு அனுமதி? இன்றைக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

727

இயற்கை வள பாதுகாப்பு மற்றும் கனிம வள பாதுகாப்பு மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து நாகை மாவட்ட காவல்துறை இன்றைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் 23ஆம் தேதி மயிலாடுதுறையில் இயற்கை வள பாதுகாப்பு மற்றும் கனிம வள பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் டி.டி.வி.தினகரன், திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். ஆனால் இந்த மாநாட்டிற்கு காவல்துறை இதுவரை அனுமதி அளிக்காததால், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இராஜமாணிக்கம், மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து இன்றைக்குள் முடிவெடுக்க வேண்டும் என நாகை மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Advertisement