கழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..

3514

ஒரு காலத்தில் மிகவும் செல்வ செழிப்பான இடமாக இருந்த ஒரு தீவு, உழைக்காமல் இருந்த காரணத்தால், அகதிகள் முகாமாக மாறிய சோகக்கதை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள மிகச்சிறிய தீவு தான் நவுரு. 1968-ஆம் ஆண்டுக்கு முந்தைய நாட்கள் வரை, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பிறகு, ஒரு பெரிய வரம் பெற்ற நாடாக உருமாறியது. அதாவது, நவுரு தீவு, பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் பறவைகள் கழிவிறக்கம் செய்து வந்ததாம்.

இதன்காரணமாக, அந்த கழிவுகள், பாஸ்பேட் எனும் மிக உயரிய உரமாக மாறியதாம். இதனை அறிந்த மற்ற நாடுகள், நவுரு நாட்டிடம் உள்ள உரத்தை வாங்குவதற்கு போட்டி போட்டன. அதன்பிறகு, பாஸ்பேட்டின் மவுசை அறிந்த அந்நாட்டினர், அதனை ஏற்றுமதி செய்யத் தொடங்கினர். இதனால், அந்நாடு செல்வ செழிப்பு மிக்க நாடாக உருவாகியது.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதி என அனைத்தையும் இலவசமாக அந்நாடு பொதுமக்களுக்கு வழங்க ஆரம்பித்தது. இவ்வாறு அனைத்தும் இலவசமாக வழங்க ஆரம்பித்ததால், பொதுமக்கள் வேலைகளுக்கு செல்லாமல், சாப்பிட்டுவிட்டு சோம்பேறிகளாக மாறினர்.

ஒரு கட்டத்தில், அந்நாட்டில் பாஸ்பேட்டின் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதனால், பெரும் பஞ்சத்தில் வாடத்தொடங்கிய அவர்கள், ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து, அந்த நாட்டை எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலியா, அவர்களுக்கு வருடந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகிறது. மேலும், நவுரு தீவை, ஆஸ்திரேலியா நாட்டிற்கு வரும் அகதிகளின் முகாமாகவும் மாற்றிக் கொண்டது.

“கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்கும் நிலைக்காது..” என்ற வசனத்திற்கு ஏற்றவாறு, நவுரு தீவு மக்களின் வாழ்க்கை மாறியது மற்ற நாட்டினரை எச்சரிக்கும் சம்பவம் ஆகும். இயற்கையின் வளத்தை அழித்தால் மற்ற நாடுகளும் இதுபோல் தான் மாறும் என்பதற்கு இதுவே உதாரணம்.

Advertisement