ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்துள்ளார். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள் வாங்கிய வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை 3 ஊழல் வழக்குகளை தொடர்ந்தது. இதில் அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 18 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். முன்னதாக லண்டனில் 4 சொகுசு வீடுகள் வாங்கிய வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.