சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

630

ஊழல் வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப்புக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில், பிரிட்டன் தலைநகர், லண்டனில், நான்கு சொகுசு வீடுகள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு,10 ஆண்டுகள், மகள் மரியமுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மருமகன் முகமது ஷப்தாருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், மூன்று பேரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இதையடுத்து மூன்று பேரும் அடிலடா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் சென்ற நவாஸ் ஷெரீப்புக்கு விமான நிலையத்தில் இருந்து வீடு வரை அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of