நவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது..! அது கமலின் இந்த பிரம்மாண்ட திரைப்படம்..!

1230

தமிழ் மட்டுமல்ல இந்தியா சினிமாவின் ஆகச்சிறந்த நடிகரை பட்டியலிட்டால், அதில் முன்னணியில் இருப்பவர் கமல் ஹாசன். எந்த துறையில் ஈடுபட்டாலும், அதில் தனது முழு உழைப்பையும் அளிக்கும் கமல், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் போன்ற பல்வேறு முகங்களை கொண்டுள்ளார்.

தற்போது தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் கமல் ஹாசன், தனது 65 பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அதில், “உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழில் ஒருவர் அல்ல, பலருக்குத் நல்ல திறமை இருக்கிறது.

ஆனால் சற்று பரந்துபட்டு சிந்தித்தால், மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஃபஹத் பாசில், பாலிவுட்டில் நவாசுதீன் சித்திக் மற்றும் ஷஷாங் அரோரா ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், நவாசுதீன் சித்திக் பற்றி இதுவரை யாரும் அறியாத ஒரு முக்கிய தகவலை அவர் தெரிவித்தார். அது என்னவென்றால், கமலின் முக்கிய படைப்புகளில் ஒன்றான ஹோ ராம் திரைப்படத்தில் தான் நவாசுதீன் சித்திக் நடித்தார் என்றும், பின்னர் அந்த காட்சி எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டது என்றும் சுவாரசிய தகவலை கமல்  தெரிவித்தார்.

மேலும், ஷஷாங் அரோரா இளம் வயதிலேயே பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளார். தனது ஆதர்ச நடிகரான நாகேஷை ஏதோ ஒரு வகையில் ஷஷாங் நினைவுபடுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement