நயன்தாராவின் அசைவ `மேஜிக்’.. – வைரல் வீடியோவிற்கு குவியும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்..!

2150

நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா, நெற்றிக்கண் படத்திலும், ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடிக்க உள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளாத நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் வழக்கம் போல் நயன்தாராவின் அழகை வியந்து பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வரும் நிலையில், ஒருசிலர் தர்பார் படத்தின் டப்பிங் பணிக்கு செல்லுங்கள் என்று அவருக்கு ஆலோசனையும் கூறி வருகின்றனர்.

இதுஒருபுறமிருக்க மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தொடங்கும் போது நயன்தாரா சைவத்துக்கு மாறி விரதம் இருப்பார். அவரைத் தொடர்ந்து ஒட்டு மொத்த படக்குழுவும் சைவத்துக்கு மாறிவிட்டதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.

அதைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நெட்டிசன் ஒருவர் “மூக்குத்தி அம்மன் படத்துக்கு விரதம் என்று சொன்னீங்களே” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement