கஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்..! பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..!

933

கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி ஊழியர்கள் அன்றாட செலவுகளுக்கு திண்டாடி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் நிதியுதவி அளித்து வரும் நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூபாய் 20 லட்சம் அளித்துள்ளார். இதுவரை நடிகைகள் வழங்கிய தொகையில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of