ஊடகங்களை தவிர்ப்பது ஏன்? – ஓபனாக போட்டுடைத்த நயன்தாரா…!

698

தமிழ் சினிமா மட்டுமல்ல… தெலுங்கு, கன்னடம், மலையாளம் தென்னிந்திய மொழி சினிமாவின் நம்பர் 1 நடிகை என்றால் தயங்காமல் நடிகை நயன்தாராவை குறிப்பிடலாம்.

தமிழில் ரஜினி, விஜய், தெலுங்கில் சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் அதே வேளையில் சோலோவாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

தொடர்ந்து உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் நயன்தாரா மீது இருக்கும் பெரிய சர்ச்சை அவர் ஊடகங்கள் தவிர்க்கிறார் என்பது தான்.

இந்த சர்ச்சைக்கு தற்போது நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். வோக் பேஷன் இதழின் இந்தியப் பதிப்பு தன்னுடைய 12-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சிறப்பு பிரதி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் தனது அட்டைப் படத்தில் நயன்தாரா உடன் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான துல்கர் சல்மான், மகேஷ் பாபு புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

இதில் பேசியுள்ள நயன்தாரா, “என்னை ஏளனமாக பார்த்தோர், நகைத்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான சிறந்த பதில் என்னுடைய வெற்றிப் படங்கள் தான்” என்றவர்,

“ஊடகங்களை தவிர்ப்பது ஏன்?” என்ற கேள்விக்கு “நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

பல முறை நான் ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப் பட்டதும் அதற்கு காரணம்” என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் விக்னேஷ் சிவனை தனது வாழ்க்கைத் துணை என நயன்தாரா குறிப்பிட்டுள்ளதாகவும், இருவரும் சேர்த்து படங்களைத் தயாரிக்க உள்ளதாவும், இதற்கான அறிவிப்பை இருவரும் சேர்ந்து விரைவில் வெளியிடுவார்கள்” என்று அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of