நயன்தாரா படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

414

சக்ரி டோலெட்டி அவர்களின் இயக்கத்தில் மதியழகன் அவர்களுடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் கொலையுதிர்காலம். கடந்த 2016ம் ஆண்டு இந்த திரைப்படம் தொடங்கப்பட்டது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நயன்தாராவுடன், நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன், பூமிகா மற்றும் ரோகினி ஹட்டங்காடி இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு ஹாலிவுடில் வெளியான “ஹூஷ்” திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கொலையுதிர்காலம்.

வருகின்ற ஜூன் 14ம் தேதி இந்த திரைப்படம் வெளிவரும் என்று தகவல்கள் வந்த நிலையில தற்போது, இந்த திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of