மீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா

734

இளைய தளபதியின் அசத்தலான நடிப்பில், அட்லீ அவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் பிகில் படத்தில் விஜய் அப்பா – மகன் என்று இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

முன்னதாக அழகிய தமிழ்மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போதும் ரகுமான் இசையில் விஜய் பாடவில்லை.

பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர்.

இதில் கதாநாயகி நயன்தாராவுக்கு என்ன வேடம் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்த நிலையில் அவர் மருத்துவ மாணவியாக நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of