இதுக்கு அப்புறம் தான் அது…! – நயன்தாரா தடாலடி- பாவம் விக்னேஷ்

908

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கு அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

நயன்தாரா 100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா உள்ளிட்டப் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

இவை தவிர விஜய் – அட்லி இணையும் தளபதி 63 படத்திலும்  கதாநாயகியாக நடிக்கிறார். அறிவிப்பு வந்தது தவிர சுமார் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். எனவே இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். நயன்தாராவுக்கு இப்போது வயது 34. நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலித்து இதுவரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர்

இவர்களின் திருமன என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை தொடுவதை இலக்காக வைத்துள்ளார் என்கிறார்கள். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைந்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.­­­­­­­ என விரும்புகிறாராம் நயன்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of