இரட்டை வேடத்தில் மிரட்ட வரும் லேடி சூப்பர் ஸ்டார்

849

தமிழ் சினிமாவில் கதை களத்தை கதாநாயகனுக்காக உருவாக்கிய காலம் மாறி கதாநாயகிக்கும் கதை உண்டு என பல திரைப்படங்கள் முன்னின்று வருகின்றன. அந்த வரிசையில் நயன்தாரா தொடங்கி திரிஷா, சமந்தா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் என தங்களின் படங்களை மக்களுக்கு அளித்து வருகின்றனர். கதாநாயகனுக்கு நிகரான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார்.

இவர் ஹீரோக்களுடன் நடிப்பது ஒருபுறம் இருப்பினும் தமக்கென கதைபாணியை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  மாயா, அறம், டோரா என தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என இரு முக்கிய திரைப்படங்களை நடித்துள்ளார். அந்த வரிசையில் 2019 ல் திரைக்கு வர பல திரைபடங்களை நடித்தும் வருகிறார். அஜித் உடன் நடித்து வெளிவரவுள்ள விஸ்வாசம். தொடர்ந்து  சிவகார்த்திகேயனுடன் புதிய படத்திலும்  நடிக்கவுள்ளார்.

பின் தான் முன்னனியாக நடிக்கும் திரைப்படமான கொலையுதிர் காலம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. மற்றும் கமல், சங்கர் கூட்டனியில் உருவாகவிருக்கும் ’இந்தியன்’ இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். மற்றும் வெகு காலம் கழித்து தெலுங்கில் ’சேரா நரசிம்மா ரெட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் நயன்தாரா , ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். அதன்படி மா, லஷ்மி போன்ற  குறும்படம் மற்றும் கடந்தாண்டு வெளிவந்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது நயன்தாராவின் 63 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்திற்கு ‘ஐரா’ என பெயரிடப்பட்டுள்ளது.  தமிழ், தெலுங்கு மொழியில் தயாரிக்கப்படும் இந்த படத்தை கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது.இந்த படத்தின் டீசரை வரும் ஜனவரி 5 –ம் தேதி வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Advertisement