நிலாவுக்கும் இப்படி ஒரு சோதனை.. நாசாவின் அதிரடி பிளான்.. என்ன நடக்கப்போகிறதோ..

746

பூமியில் உள்ள வளங்களை, பேராசையுள்ள மனிதர்கள் அனைவரும் அழித்து வருகின்றனர். இதன்காரணமாக, வெப்பமடைதல், நீர் மட்டம் உயருதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை பூமி சந்தித்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில், நாசாவின் அடுத்த பிளானை கேட்டால், அனைவரும் ஆடிப்போயிடுவீர்கள். அதாவது, நிலவில் உள்ள பாறைகளையும், அதன் படிமங்களையும் எடுக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பல்வேறு தனியார் நிறுவனங்களை, உலகம் முழுவதிலும் தேடி வருகிறது. இந்த திட்டத்தை 2024ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தவும் நாசா திட்டமிட்டுள்ளது. இது குறித்து நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில், நிலவின் மேற்பரப்பில் உள்ள எந்த இடத்திலிருந்தும் கனிமம் அல்லது பாறைகளை சேகரிக்கலாம் என்றும், பாறைபடிவங்களுக்கு மட்டும் தான் நாசா கட்டணம் பெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அதற்கான மீட்டெடுப்பு முறைகளை நாசா தீர்மானிக்கும் எனவும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். பூமியின் வளங்களை பதுக்கிய மனிதன், தற்போது நிலவு வரை தனது வேட்டையை தொடங்க இருக்கிறான் என்பது நிதர்சனம்..