காவல் ஆய்வாளர் நசீர் அகமது லஞ்சம் கேட்கும் ஆடியோ – விசாரணைக்கு உத்தரவு

1131

ராமநாதபுரத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு அனுமதி அளிக்க சிக்கல் காவல் ஆய்வாளர் நசீர் அகமது லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மணல் கொள்ளைக்கு உடந்தையாக செயல்படுவதற்காக சிக்கல் காவல் ஆய்வாளர் நசீர் அகமது லஞ்சம் கேட்கும் ஆடியோவை சத்தியம் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.

அதில் கீரந்தை அருகே உள்ள தத்தங்குடி கண்மாயில் 3 லோடு மணல் கொள்ளையடிக்க மாஃபியா கும்பலை சேர்ந்த காளி என்பவரிடம் காவல் ஆய்வாளர் நசீர் அகமது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது ஆடியோவில் பதிவாகி இருருந்தது.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் லஞ்ச பேரம் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ராமநாதபுரம் டி.எஸ்.பி நடராஜன் தலைமையில் தனி குழு அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.