சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

370

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தற்போது ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகர்கள் குழு இன்று  கூடுகிறது. இதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிப்பது குறித்தும் முடிவு செய்ய உள்ளனர். பேரிடர் நல நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான ஜி.எஸ்.டி கவுன்சிலின் அமைச்சரவைக் குழுவும் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் கேரள வெள்ளப் பேரிடருக்கு வழங்கப்பட்ட நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படுகிறது. இந்த இரு அமைச்சரவைக் குழுக்களின் முடிவுகளும், வரும் 10ஆம் தேதி கூடவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of