முரசொலி அலுவலகம்..! பஞ்சமி நில விவகாரம்..! தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் அதிரடி முடிவு..!

344

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி ஆகும். கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த நாளேட்டின் அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று பாஜக உட்பட சில அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதில், பாஜகவின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் ஒரு படி மேலே சென்று, தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக விசாரிக்க, முரசொலியின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் இதுதொடர்பான விசாரணையை நடத்த உள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of