ஊருக்கு போன புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர்…! தெற்கு ரயில்வே தகவல்

181

சென்னை: தமிழகத்தில் இருந்து 2 லட்சத்து 41 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து, பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட சொந்த மாநிலங்களுக்குப் போக முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு அவர்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர்கள் தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து இதுவரை 193 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள் மூலம் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 850 வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of