ரஃபேல் போர் விமானஒப்பந்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

692

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே ரபேல் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி எம்.எல்.சர்மா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் விமானம் ஒப்பந்த விவரங்களை விளக்க அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement