பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம்

446

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ருமேனியா சென்றுள்ள வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் கிலாஸ் லோஹன்னிஸை சந்தித்து பேசினார். அப்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, 70 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தியா, ருமேனியா இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார்.

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிரியாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒடுக்க சர்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of