பா.ரஞ்சித் ன் அடுத்த படம் தொடங்கியது

500
neelam pro

பா.ரஞ்சித் தயாரிக்கும்  “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் பா.ரஞ்ஜித் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்குகிறார். மற்றும் ‘’ தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ மற்றும் ’’மகிழ்ச்சி’’ ஆகிய ஆல்பங்களுக்கு இசையமைத்த தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நீலம் புரொடக்‌ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. கடந்தாண்டு வெளிவந்த படங்களில் பரியேறும் பெருமாள் மிகப் பெரிய வெற்றி படம் என்பதால் பா.ரஞ்சித் சார்ந்து வருவதால் ரசிகர்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of