நேர்கொண்ட பார்வையின் செம அப்டேட்! படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்!

754

அமிதாப் பச்சன், டாப்சி ஆகியோர் நடித்து பிளாக்பஸ்டர் ஷிட் அடித்த படம் பிங்க். இந்த திரைப்படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால், நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படம் ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி அன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது 8 ஆம் தேதியே வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உச்சபட்ச சந்தோசத்தில் உள்ளனர்.