நேர்கொண்ட பார்வை Trailer-ல் கவனிக்காத முக்கிய தகவல்கள்! இவ்வளவு பெரிய விஷயமா..?

1456

பாலிவுட் திரையுலகின் சுப்பர் ஸ்டாராக கூறப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் நடிப்பில்  கடந்த 2016-ஆம் ஆண்டு பிங்க் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்துல தல அஜித்குமார் நடிப்பில் உருவாகிட்டு வருது. நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தோட ட்ரைலர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலர் வெளியாகியதில் இருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த ட்ரைலரோட கடைசியில தல அஜித்,

“உங்களோட விஸ்வாசத்த காட்டுவதற்கு மத்தவங்கள அசிங்கப்படுத்தாதிங்க”

-னு ஒரு வசனம் பேசியிருப்பார்.

இந்த வசனம் அவருடைய ரசிகர்களுக்கான அறிவுரையா இருக்கும்-னு இணைதளங்களில் பரபரப்பா பேசிக்கிட்டு வராங்க. அதாவது, ஒரு படம் வெளியாகும்போது அந்த படத்தோட ஹீரோவின் ரசிகர்கள் படத்தை புரோமோஷன் பண்றதற்கு மத்த ஹீரோக்கள வசைபாடுறாங்க-னு பரவலா ஒரு குற்றச்சாட்டு இருக்கு.

அந்த மாதிரியான குற்றச்சாட்டு தன்னுடைய படங்களுக்கும் இருக்கு என்பதை தல அஜித் தற்போது உணர்ந்துள்ளாராம். இதனால், படத்தின் ட்ரைலரில் இந்த வசனம் வைக்க வைக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of