தல படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..? சீக்கிரம் தலதரிசனம் செய்யும் ரசிகர்கள்!

678

அஜித்தின் விசுவாசம் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, தீரண் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இந்த திரைப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் ஆகஸ்டு 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்டு 1-ஆம் தேதியே வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of