நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

511

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.

தேர்வு எழுதக்கூடிய ஒவ்வொரு மாணவர்களும் பின்பற்ற வேண்டுடிய விதிமுறைகள்.

தேர்வுக்கு தயாராகிய மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் கவனமாக இதனை பின்பற்றினால் தேர்வு மையத்துக்கு எவ்வித சிக்கலிலும் மாட்டாமல் சென்று தேர்வு எழுதலாம்.

மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாக 1.30 மணிக்கு செல்வது நல்லது.

வெப்செட்டில் இருந்து பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்த அதே பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றை கொண்டு வரவேண்டும்.

ஒரிஜினல் அடையாள அட்டை ஒன்றை கொண்டு செல்ல வேண்டும். பாஸ்போர்ட், ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது.

சலுகை பெறக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவர்களாக இருந்தால் அதற்கான துறைரீதியாக வழங்கப்பட்ட சான்றிதழ் ஒரிஜினலை கொண்டு வர வேண்டும்.

மாணவர்கள் மெல்லிய அரைக்கை ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

சம்பிரதாய மற்றும் பாரம்பரிய உடைகள் அணிந்து வருபவர்கள் தேர்வு அறைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும்.

அதிக உயரம் கொண்ட காலணிகளை அணியாமல் குறைவான ஹீல்ஸ் அணிந்து வர வேண்டும்.

தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விடைக்கு கூடுதலாக பதில் அளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும்.

தேர்வு மையத்திற்கு பேனா, பேப்பர், வாலெட், பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், செல்போன் கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் கூடாது.

குடிநீர் பாட்டில், டீ, காபி, குளிர்பானம், நொறுக்கு தீனி போன்றவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்து செல்லக்கூடாது.

நீரழிவு நோயாளியாக இருப்பவர்கள் உரிய அனுமதியுடன் மாத்திரை, பழம், வெளிப்படையான குடிநீர் பாட்டில் கொண்டு செல்லலாம்,

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, குளிர்பானம், சாக்லேட், சான்விச் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷூ மற்றும் முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது.