நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : அதிரடியாக களமிறங்கிய தமிழக பொலீஸ்… கேரளாவில் முக்கிய புரோக்கர் கைது..!

264
நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது.
 
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர்.
 
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
இதைத்தொடர்ந்து திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா விரைந்த தமிழக போலீசார்,இந்த  நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக இருந்த நீட் பயிற்சி மையம் நடத்திவந்த ஜார்ஜ் ஜோசப் என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.