தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி

361

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் ஒடிசாவை தவிர்த்து பிற மாநிலங்களில் 5-ம் தேதியும், ஒடிசாவில் 20-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மதியம் இணையத்தில் வெளியிட்டது.

இதில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவில் தமிழகத்தின் கார்வண்ணபிரபு 575 மதிப்பெண் எடுத்து 5ம் இடம் பிடித்துள்ளார்..