” நீட் தேர்வு ஒன்றே தீர்வு” – காங்கிரஸை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

435

கோடிக்கணக்கில் செலவளிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பாஜக ஆட்சியில் மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. அதேசமயம் ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யப்பட்டும்  என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார்.

இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

மாநிலங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் செய்து வருகிறது. ‘நீட்’ தேர்வு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானது. இந்த தேர்வு மூலம் சாதாரண மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு இருந்ததை விட அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிக அளவு ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்று உள்ளனர். கோடிக்கணக்கில் செலவளிக்க முடியாத பாமர மக்கள் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வுதான் ஒரே வழி.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது என்கிறார்கள். கணக்கில் காட்டப்படாத பணத்தை, மக்களை விலைக்கு வாங்க வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்தால் அது தவறா?

தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் பெற்ற அமைப்பு அவர்கள் என் வீட்டில் கூட சோதனை நடத்தட்டும். அங்கிருந்து பணத்தை எடுத்துச் சென்றார்கள். என் வீட்டில் பணத்தை வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும். நான் தேர்தல் செலவுக்குகூட பணம் இல்லாமல் இருக்கிறேன்.

வடநாட்டில் எங்கும் காங்கிரசால் வெற்றிபெற முடியாது. அதுபோல தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று தேடிய இடங்களில் எல்லாம் வெற்றிபெற முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் கேரளாவின் வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் தங்களுடன் கூட்டணி வைத்துள்ளவர்களை எதிர்த்து அங்கு காங்கிரஸ் களம் இறங்குகிறது. ராகுல்காந்தியை தோற்கடிப்போம் என்று பினராயி விஜயன் கூறி உள்ளார். அதை நாம் நம்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of