நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இன்று தொடக்கம்

565

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைக்கிறார்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்திய மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நீட் விலக்கு அளிக்கப்பட்டு 12ஆம் வகுக்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன.

கடந்த ஆண்டு பயிற்சியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசே வினா வங்கி புத்தகங்களை தயாரித்து, தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளித்தது. ஆனால், இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறையே நேரடியாக பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

அதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினா வங்கி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்கள் தொடங்கப்பட்டு, நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of