பாலியல் சீன்டலுக்கு எதிர்ப்பு.. இளம்பெண்ணை மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..

2771

உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள மொகமதாபாத் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

மொட்டை மாடியில் அந்த பெண் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பாலியல் சீன்டலில் ஈடுபட்டனர்.

இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement