நெய்வேலியில் பாய்லர் வெடித்த விபத்து – அமித்ஷா வேதனை

311

நெய்வேலியில் பாய்லர் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவம்  வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்எல்சி.யில் பாய்லர் வெடித்த இடத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.