இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் அஞ்சலிக்காக வைப்பு

195
Nel-jeyaraman

இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அருகே உள்ள கட்டிமேட்டை சேர்ந்தவர் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன்.

இவர் 169 அரிய வகை நெல் விதைகளை மீட்டெடுத்ததால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் நேற்று அதிகாலை காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன் உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கட்டிமேடு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து நெல் ஜெராமனின் உடலுக்கு, இன்று மதியம் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.