12-ம் வகுப்பு புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்த பாடம்! சிறப்பித்த தமிழக அரசு!

795

பாரம்பரிய நெல் வகைகளை தேடி, அவற்றை காப்பதில் அயராது உழைத்தவர் நெல் ஜெயராமன்.

இவரது பணியை போற்றும் வகையில், நெல் ஜெயராமன் குறித்த குறிப்பை 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் வைத்து தமிழக அரசு சிறப்பித்துள்ளது.

புகழ்பெற்ற தாவரவியலாளர்களான நார்மன் இ.போர்லாக் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோரின் வரிசையில் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.

வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த நெல் ஜெயராமன் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நிலையில், 12ஆம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியுள்ளார்.