என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக்

577

என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

SDPI கட்சியின் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சிறுபான்மையின முஸ்லிம்கள் மற்றும் மதசார்பற்ற அமைப்புகளை முடக்கும் செயல்களில் என்.ஐ.ஏ அமைப்பு ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் என்ஐஏ அமைப்பை கலைக்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக முபாரக் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of