நெல்லைக்கு அடித்த ‘லக்..’ முதல்வர் அசத்தல் அறிவிப்பு..

496

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெல்லைமாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப்பூங்காம், ராதாபுரம் கால்வாய் திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ்  8 ஆயிரம் கோடிரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஆயிரம் கோடிரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சங்கரன்கோயில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இ- பாஸ் முறையை இப்போதைக்கு ரத்து செய்யமுடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

EIA- 2020 சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை ஆராய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆய்வுக்குழு பரிந்துரைப்படி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.