புதிய வரைபடம் வெளியிட்டு இந்தியாவை வம்பிழுத்த நோபாளம்..! என்ன நடந்தது..?

835

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கி, கடந்த மே மாதம் நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை மீறி, இந்த புதிய வரைபட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து உருவாக்கியுள்ள புதிய வரைபடத்தை, ஆங்கில மொழியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகளை நேபாள அரசு தயார் செய்துள்ளது.

புதிய எல்லைகள் குறித்து, சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்துவற்காக, ஐ.நா. தலைமையகத்திற்கும், முன்னணி தேடுதல் வலைதளமான கூகுள் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது.