“ராமர் இந்தியர் இல்லை..” – குண்டை போட்ட நேபாளம்

802

நேபாள பிரதமரின் செயல்பாடுகளால், அண்மை காலமாக இந்தியா –  நேபாளம் இடையேயான உறவில், விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்திய எல்லைகளை உள்ளடக்கி வரைபடம் வெளியிட்டது, கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டியது, இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை என, அடுத்தடுத்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை நேபாளம் எடுத்து வருகிறது.

நேபாளம் சீனாவிடம் நெருக்கம் காட்டி வருவதால், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமர் பிறந்தது நேபாளத்தில்தான் என்றும், அயோத்தியும் அந்நாட்டில்தான் உள்ளதாக நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்தியர் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்தியா – நேபாளம் இடையே முரண்பாடுகள் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில், நேபாள பிரதமரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement