“ஆரம்பமே அமர்க்களமான“ டிக்கெட் விற்பனை..! – மாஸ் காட்டிய “தல” ரசிகர்கள்..!

538

நேர்கொண்ட பார்வை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

யுவன்சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வருகிறது.

இன்று டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதை ரசிகர்கள் சமூகவலைதளங்களிலும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்கும் விதமாக திரையரங்க வாயில்களை அஜித் கட் – அவுட்கள் ஆக்கிரமித்துள்ளன.ரசிகர்களுக்காக திரையிடப்படும் முதல் காட்சிக்கு அடையாள அட்டையுடன் தயாராகி வருகின்றனர் தீவிர ரசிகர்கள்.

டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.