தாங்கள் யாருக்கும் அடிமை சாசனம் எழுதி தரவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

428

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்ற ராம்தாஸ் அத்வாலே கருத்து பாஜகவின் கருத்தல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123வது பிறந்ததினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு கீழ்  வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்துக்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும் என்றும்  தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கிறோம்,சில திட்டங்களை ஆதரிக்கிறோம் என்றும் பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே தவிர. அது அதிமுகவின் கருத்து அல்ல எனவும் விளக்கம் அளித்தார்.

தாங்கள் யாருக்கும் அடிமை சாசனம் எழுதி தரவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of