இப்படி செய்யலாமா.. மணிரத்னத்தை ஆவேசமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..

3246

தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து மீது, பாடகி சின்மயி, மீ டூ புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் நவரசம் என்ற ஆந்தலாஜி படமென்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில், குறிப்பிட்ட கதை ஒன்றிற்கு, பிரபல பாடகர் கார்த்திக் இசையமைக்க இருக்கிறார்.

கார்த்திக் மீதும் பல்வேறு பெண்கள் மீ டூ புகார் அளித்துள்ளதால், அவரை மட்டும் ஏன் உங்களின் படத்தில் இருந்து நீக்கவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர்களோடு சேர்த்து, பாடகி சின்மயி-ம் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால், வைரமுத்து நீக்கியதைப்போன்று, பாடகர் கார்த்திக்கும் நீக்கப்படுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..?

Advertisement