அபிநந்தன் எந்த ஜாதியை சார்ந்தவர்? தேடும் நெட்டிசன்ஸ்

571

பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சர்வதேச நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக அந்நாட்டு அரசு அண்மையில் விடுவித்தது.பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நொடி முதல் அபிநந்தன் வர்தமான் குறித்த தகவல்களை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் இணையம் மூலம் தொடர்ந்து தேடி வந்தனர்.

அபிநந்தன் பிறந்த ஊர், அவர் பெற்றோர் குறித்த விவரங்கள், பள்ளி  கல்லூரி குறித்த விவரங்கள் என பல்வேறு தகவல்களை பொதுமக்கள் இணையம் மூலம் கண்டுபிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர். இப்படி அபிநந்தன் குறித்த பல தகவல்களை தேடி வந்த மக்கள், அவரது சாதியையும் விட்டு வைக்கவில்லை.

அபிநந்தன் எந்த ஜாதிய சார்ந்தவர் என்பது குறித்து கூகுளில் பலர் தேடியுள்ளனர். இந்த தேடல் இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் தேடப்பட்டுள்ளது.

அதும் ஒருவர் இருவர் தேடவில்லை இந்தியா முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அபிநந்தனின் ஜாதி குறித்து கூகுளில் தேடி உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தாய் நாட்டுக்காக எதிரி நாட்டிடம் சிக்கி, தன் உயிரை பணயம் வைத்து இந்தியாவின் ரகசியத்தை காத்த வான் வீரர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதை அறிந்துகொள்வதை விட ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுத்து தேச பற்றுடன் வாழ ஒவ்வொரு இந்தியனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் வளர்ந்துள்ளது!