நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை

572

தேனி மாவட்டம் தேவாரம் – பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்து எழுத்துபூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்கு தடையில்லை என்றும், தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்த பின்னரே நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த பிறகே நியூட்ரினோ திட்டத்திற்கு முழுமையாக தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Advertisement