அரசு கல்லூரிகளுக்கு தமிழக அரசின் புதிய உத்தரவு

425

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கலந்தாய்வு நடைபெற்று வரும் வரும் நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கலை பிரிவில் 20 சதவீதமும், அறிவியல் பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதமும் மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம். மேலும், கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92,000 இடங்கள் உள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement