புதுவித போதை பழக்கம் வேகமாக பரவுகிறது

281

புதுச்சேரியில் பரவ துவங்கி உள்ள பெட்ரோல் பெவிகால் கரைசல் இன்ஹலேர் போதை பழக்தத்திற்கு அடிமையாகி இளைஞர்களும் சிறுவர்களும் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

மது போதைக்கு அடுத்தப்படியாக சமூகத்தை சீரழிப்பவை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்தும் இளைஞர்கள் பல மணிநேரத்திற்கு போதையில் திளைப்பதால் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.புதுச்சேரியில் கஞ்சா பான்மசாலா போன்ற போதை பொருட்களே அதிக அளவில் கிடைக்கிறது.

பான்மசாலா தடை செய்யப்பட்டு இருந்தாலும் சாலையோர பெட்டி கடைகளில் சரளமாக கிடைக்கிறது.கஞ்சா பயன்படுத்துவதும் விற்பதும் குற்றம். ஆனால் புதுச்சேரி நகரின் பல பகுதியில் கஞ்சா சிகரெட், கஞ்சா இலை பொட்டலம், கஞ்சா குழம்பு என விதவிதமான பிளேவரில் கிடைக்கிறது.

இரவு நேர வாழைப்பழக்கடைகள் பழக்கடைகள் பெட்டி கடைகளில் இவை கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் தற்போது புதுவிதமான போதை பழக்கம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவ துவங்கியுள்ளது.

பேன்சி பொருட்கள் கடை மற்றும் ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் மர சாமான்களை ஒட்டும். பெவி காலையும் பெட்ரோலையும் கலந்து போதை தரும் இன்ஹேலர்களாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

பெவிகால் மற்றும் பெட்ரோல் கரைசலை ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி அதில் வாயால் காற்றை ஊதும்போது அதிலிருந்து வரும் காற்றை நுகரும்போது போதை தலைக்கேருகிறது. ஒரு முறை நுகரும்போது அந்த போதை ஒரு மணி நேரத்திற்கு தாக்குபிடிக்கிறது. மீண்டும் மீண்டும் நுகர்ந்து போதையேறி பல இளைஞர்கள் மயங்கி கிடக்கின்றனர்.

நகரின் பெரிய வாய்க்கால் அரியாங்குப்பம் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம் உள்ளிட்ட பல இடங்களில் கும்பல் கும்பலாக திரியும் சிறுவர்கள், இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். பெவிகால் மற்றும் பெட்ரோலை யார் வேண்டுமானலும் வாங்க முடியும் என்பதால், சிறுவர்கள் எளிதாக வாங்கி போதை பொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.

போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு, மறுவாழ்வு அளிக்கவும் இதுபோன்ற போதை பொருள் பழக்கத்தால் வாழ்க்கை சீரழியும் என்பதை பள்ளி பருவத்திலே மாணவர்களுக்கு விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of