ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…

132

ஊரடங்கு முடிந்து ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்படும் சூழலில், அவை பின்பற்றவேண்டிய புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜூன் 8 முதல் மால்கள், ஹோட்டல்கள் இயங்க ஆரம்பித்தபின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,

வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஷாப்பிங் மால்களைத் திறக்க அனுமதியில்லை.

மால்களுக்குள் வரும் அனைவருக்கும் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனிங் செய்து, சானிடைசர் வழங்க வேண்டும்.

ஷாப்பிங் மால்களில் பணியாற்றுவோர், கடை வைத்திருப்போர், வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஆங்காங்கே இடம் பெற வேண்டும்.

ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகளுக்குள் செல்லும் மக்கள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்தபின்னே அவர்களை டெலிவரி செய்ய அனுப்ப வேண்டும்.

எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தும்போது ஒரு படி விட்டு மற்றொரு படியில் 2-ஆவது நபர் நிற்குமாறு சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கழிவறைகளைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.

ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் விளையாடும் பிரிவு, திரையரங்கம் தொடர்ந்து மூடப்பட வேண்டும்

போன்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of