சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்

701

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தொடர்ந்து 18 கோடியே 79 லட்சம் மதிப்பிலான 13 திட்டப் பணிகளை அவர் தொடக்கி வைத்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆட்சியை கலைக்க எத்தனை சதித்திட்டம் தீட்டினாலும் அத்தனையும் தகர்த்தெறிவோம் என கூறினார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆடம்பர விழா என்று ஸ்டாலின் குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர், மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவித்து மக்கள் விழாவாக கொண்டாடியதாக கூறினார்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் இந்த விழாவுக்கு எதிராக சதி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்படும் பணி, விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.