மாமனார்,மாமியாருக்கு இனி குதுகாலம் தான்… வந்து விட்டது சிறைதண்டனை

900

மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமகன் மற்றும் மருமகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் மசோதாவின்படி, கவனிக்க முடியாத பெற்றோர்களுக்கு பராமரிப்பு தொகையாக பத்தாயிரம் ரூபாய் அளிக்க வேண்டுமென்ற சட்டம் ஏற்கெனவே இருந்த நிலையில் அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதில் கவனிக்க முடியாத பெற்றோருக்கான பராமரிப்பு தொகையின் வரம்பு பிள்ளைகளின் ஊதியத்தை கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே  விதிக்கப்படும் என்ற புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of