இது தான் புதிய பாராளுமன்றமா..? முக்கோண வடிவத்தில் வெளியான மாதிரி புகைப்படம்..!

210

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருவதால், எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அதிக இருக்கைகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த பாராளுமன்ற கட்டிடத்தை முக்கோண வடிவத்தில் கட்டி முடிப்பதற்கு ஆமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் யோசனை தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் புதிய பாராளுமன்றத்தின் முக்கோண வடிவிலான மாதிரி வரைப்படம் ஒன்று வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிடம் மக்களவை, மாநிலங்களவை என இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர போதுமானதாகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும் கட்டப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of