பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் புதிய சொத்துவரி

525
chennai corporation

சொத்து வரி சட்ட விதிகள்படி, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் வரி சீராய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், கடந்த 20 ஆண்டு களாக சொத்துவரி மாற்றி அமைக்கப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 17-ம் தேதி சொத்துவரி சீராய்வு சம்பந்தமாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது பிற மாநிலங்களில் உள்ள சொத்து வரிவிதிப்புகளை ஒப்பிட்டு, தமிழக மக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதியை உயர்த்தவும் சொத்துவரியை உயர்த்தி சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, குடியிருப்புகளுக்கும் வாடகை குடியிருப்புகளுக்கும் 50 சதவீதமும் குடியிருப்பல்லாத மற்ற சொத்துக்களுக்கு 100 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட புதிய வரி தொகை குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்டவர் களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

மேலும், இன்று முதல் புதிய சொத்துவரி அமல்படுத்தப்படுவதாகவும் உடனடியாக வரியை செலுத்த வேண்டும் என்றும் சொத்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.