16 வயதுக்கு உட்பட்டோருக்கு புதிய கட்டுப்பாடுகள் – டிக்-டாக் நிறுவனம்

300

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள், பொழுதுப்போக்கு செயலியான டிக்-டாக்கில் அதிகளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள் டிக்-டாக்கில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இதனை குறைக்கும் விதமாக ஃபேமிலி பேரிங் (Family Pairing ) என்ற புதிய வசதியை டிக்-டாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெற்றோர்கள் இந்த புதிய வசதி மூலம் தங்களது குழந்தைகள் டிக்-டாக் செயலியில் அதிக நேரம் செலவிடுவதையும், மற்றவர்கள் நேரடியாக தகவல் அனுப்பும் வசதியை கட்டுப்படுத்த முடியும்.

கூடுதலாக 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் நேரடி தகவல் அனுப்பும் வசதியையும் முடக்கியுள்ளது.

Advertisement